Tuesday, November 17, 2009

ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை ஒரே மின்னஞ்சற் பெட்டியில் ஒருங்கிணைத்து செயல்படுத்துவது எப்படி?


ஒரு நபரிடம் உங்கள் விலாசம் தாருங்களேன் என்று 20 வருடங்களின் முன்னே கேட்டால், சற்றும் யோசிக்காமல் அவர் தன் வீட்டு விலாசத்தைக் காகிதத்திலோ விண்ணப்பப் பத்திரத்திலோ எழுதிக் கொடுப்பார். ஆனால் இப்போழுது அதே கேள்விக்குப் பதிலாய் வருவது இந்த எதிர்க் கேள்வி தான் " வீட்டு விலாசமா? மின்னஞ்சல் முகவரியா? " என்று கேட்பார்.
இதில் இவர் தவறேதும் இல்லை. காலம் மாறிவிட்டது, நம் அன்றாட வாழ்வில் கணணி மற்றும் இணையத்தின் ஆக்கிரமிப்பைத் தான் இந்த எதிர்க் கேள்வி பிரதிபலிக்கிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையினர் மட்டும் இல்லை, கணணியைப் பயன்படுத்தும் எல்லோரும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் இருக்கின்றன. அப்படி இருப்பது ஒரு விதத்தில் நல்லதும்கூட. உங்கள் உத்தியோக மற்றும் தனிப்பட்ட கடிதப் பரிமாற்றங்கள் இரண்டையும் தனியே நிர்வகிப்பதுதான் சரி. இன்னும் சிலர் ஐந்தாறு மின் அஞ்சல் முகவரிகள் வைத்திருப்பார்கள். குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள ஒன்று, மிகமிகப் பரிசயம் உள்ள நண்பர்களுக்கென்று ஒன்று, சும்மா ஒரு சம்பரதாயத்துக்கு முகவரி கேட்பவர்களுக்கு ஒன்று இப்படி பல காரணங்கள் இருக்கும். ஆனால் எப்பவுமே எல்லா அஞ்சல் பெட்டிகளையும் பார்த்து பதில்கடிதம் போடுவது சிரமம் மட்டும் இல்லை, ஒரு விதமான நச்சரிப்பை ஏற்படுத்தும். இந்தக் காரணத்தால் சில மின் அஞ்சல் பெட்டிகளைப் பலவாரங்கள் திறக்காமலேயே கூட இருக்க வாய்ப்பிருக்கிறது. அம்மாதிரி நேரத்தில் முக்கியமான கடிதம் வந்தால் நமக்குத் தெரியாமலேயே போய்விடும்.
அதனாலே, எவ்வளவு மின் அஞ்சற் பெட்டிகள் வைத்திருந்தாலும், எல்லா அஞ்சல்களையும் ஒரே பெட்டியில் பார்ப்பது / படிப்பது மற்றும் பதில்கடிதம் போடுவது நம் நேரத்தையும் வேலையையும் நிர்வகிக்க உதவியாக இருக்கும். 'என்னடா, ஒரு காரணமாத் தானே பல முகவரிகள் வச்சிருக்கோம், எல்லாம் ஒரே பெட்டியிலிருந்து பதில் போட்டால், எல்லாருக்கும் என் " வெளியிட விரும்பாத " முகவரி தெரிந்துவிடுமே என்று கவலைப்பட வேண்டாம். இந்த முறையின் சிறப்பே உங்களுக்கு எந்த முகவரியைத் தெரியப்படுத்த விருப்பம் இருக்கோ, அதிலிருந்து பதில் போட்டது போலவே Settings அமைக்கலாம்.
Ex: உங்களிடம் 4 மின் அஞ்சல் முகவரிகள் உள்ளன. mydu22@gmail.com, mydu22@hotmail.com mydu22@abc.com , mydu22@rediffmail.com .
செய்முறை விளக்கத்துக்காக நீங்கள் mydu22@gmail.com என்ற முகவரியைத் தான் மிக அதிகமாகப் பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முதல்கட்ட நடவடிக்கையாக, எல்லா அஞ்சல்களையும் உங்கள் mydu22@gmail.com என்ற முகவரிக்குத் தானாகவே Forward செய்யும்படி  அமைக்க வேண்டும்.
  1. சம்பந்தப்பட்ட ( மற்ற ) மின் அஞ்சற் பெட்டியில் இருக்கும் Settings / Mail Oprions / Options / Filters ல் போய் Forward Mails  என்பதைத் தேர்வு செய்யுங்கள். அதில் Forward all incomming mails  ஐத் தேர்வு செய்யுங்கள். நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தும் முகவரியை இங்குக் குடுக்கவும்.[ இந்த உதாரணத்தில் mydu22@gmail.com ] இப்படிக் கொடுப்பதால், எல்லா அஞ்சல்களும் ஒரே முகவரியில் வந்து சேரும்.
  2. ஆடுத்ததாக, உங்கள் gmail பெட்டியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். யார் எந்த முகவரிக்குக் கடிதம் போட்டார்களோ, அவங்களுக்கு உங்கள் பதிற்கடிதம் அந்த முகவரியிருந்தே போட்டமாதிரி இருக்கும்.
  3. உங்களது Gmail ல் வலதுபக்கம் இருக்கும் Settings ஐத் தேர்வு செய்யவும்
  4. இதில் Accounts என்பதைத் தேர்வு செய்யவும்.
  5. அடுத்து Add another email address you own ல் சொடுக்கவும்
  6. அடுத்து வரும் பெட்டியில் உங்களுடைய இன்னொரு மின்னஞ்சல் முகவரியைக் கொடுங்கள். (உதா: mydu22@hotmail.com )
  7. நீங்கள் கொடுக்கும் முகவரி உங்களுடையது தானா என்று சரிபார்க்க Verification Mail  அந்த முகவரிக்கு அனுப்பப்படும்.
  8. அடுத்து mydu22@hotmail.com இல் சென்று, அங்கு வந்திருக்கும் அஞ்சலில் இருக்கும் confirmation Code ஐ Copy செய்து, Step 5 இல் சொல்லப்பட்டிருக்கும் பெட்டியில் கொடுத்து Verify செய்யவும்.
  9. மறுபடியும் Gmail – Settings – Accounts ஐப் பார்த்தால்  உங்களது mydu22@hotmail.com என்ற முகவரி சேர்ந்திருப்பதைப் பார்க்கலாம்.
  10. பதில் போடும் முகவரி எதுவாக இருக்கவேண்டும் என்பதைத் தேர்வு செய்ய, When receiving a message: - Reply from the same address email was sent to என்பதைத் தேர்வு செய்தால் மட்டுமே போதும்.

 உங்களது மற்ற முகவரிகளையும் இம்மாதிரி settings செய்தால் அடிக்கடி எல்லாப் பெட்டிகளையும் திறக்கும் அவசியம் இருக்காது. இது மட்டும் இல்லை, Gmail – Compose box – FROM என்ற இடத்தில் நீங்கள் இணைத்துள்ள அனைத்து முகவரிகளின் பட்டியல் இருக்கும். தேவையானதைத் தேர்வு செய்து கடிதம் அனுப்பலாம்.
இப்போ திருப்பதியா................?

1 comment: