Wednesday, October 28, 2009

ஒரே கிளிக்கில் 90 இலவச மென்பொருட்கள்

Antivirus to Web browsers...


நீங்க புதுசா கணினி வாங்கி இருக்கீங்களா?.....
இல்ல உங்க கணினில புதுசா மென்பொருட்கள் (softwares) நிறுவணுமா.?
அதுக்கு நீங்க ஓவ்வொரு மென்பொருளா தேடித் தேடி அலைய வேண்டியதில்லை .கீழ இருக்கற தளத்துக் போனா உங்களுக்கு வேண்டிய அனைத்து மென்பொருட்களும் (a to z) ஒரே கிளிக்கில் கிடைக்கும்.
ரொம்ப லேசா போச்சிபா......

தள முகவரி


ஒலி நூலகம் தெரியுமா?


நீங்கள் இசையமைப்பாளராகவோ அல்லது இசைப்பிரியராகவோ இருந்து புதிய வித்தியாசமான ஒலியை தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.அவ்வாறாயின் நீங்கள் செல்ல வேண்டிய இடம் எது தெரியுமா?

அது இடம் அல்ல இணைய தளம்; இல்லை ஒலி நூலகம்.
சவுண்டுஸ்நேப் என்பது அதன் பெயர்.
நுலகம் என்றால் புத்தங்கள் இருக்கும் என்பது போல இந்த தளத்தில் ஒலிகள் குவிந்து கிடக்கின்றன‍. இல்லை அழகாக ,வரிசையாக, வகை வகையாக அடிக்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த ஒலிகள் இடம்பெற்றுள்ளன. எல்லமே ஹாலிவுட் இசையமைப்பாளர்கள்,மற்றும் தொழில் முறை இசையமைப்பாளர்கள் வுருவாக்கியவை.
விலங்குகளின் ஒலிகள், தொழிற்சாலை ஓசைகள், இசை மெட்டுக்கள், வீட்டில் கேட்கும் ஒலிகள், இயற்கை ராகங்கள் என எண்ணற்ற ஒலிகள் கொட்டிகிடக்கின்றன.
இதில் எவற்றை வேண்டுமாலும் பதிவிறக்கம் செய்து கேட்டு பார்க்கலாம் . பயன்படுத்தலாம்.காப்புரிமை தொல்லை கிடையாது.எனினும் நிபந்தனைகளை கவனமாக படித்துக்கொள்ளவும்
ஆனால் அதற்கு முன்னால் உறுப்பினாராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.பதிவு செய்த பிறகு ஒலிகளை தேட துவங்கிவிடலாம்.
ஒலிகளை கேட்பது மட்டும் அல்ல உங்கள் வசம் உள்ள ஒலிகலையும் இங்கே சமர்பிக்கலாம்.
ஆரம்பத்தில் எத்தனை முறை வேன்டுமானாலும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய அனுமதித்து வந்தனர். ஆனால் இப்போது முதல் 5 ஒலிகள் மட்டுமே இலவசமாக உள்ளது. அதன் பிறகு கட்டணம் உண்டு.
அதிகமானோர் பதிவிறக்கம் செய்வதால் தளத்தை பராமரிக்க அதிக செலவு ஆவதாலும், ஒலிகளை வழங்குபவர்கள் அதற்கான பலனை கேட்பதாலும் பகுதி இலவசம் பகுதி கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது.
ஆனால் ஒன்று நீங்கள் ஒலிகளை சமர்பிப்பவராக இருந்தால் இதன் மூலம் வருமானம் வரவுன் வாய்ப்புள்ளது அல்லவா?

ஒலிகளை கேட்டு ம‌கிழ….
Link

Thursday, October 22, 2009

என் ஏகாந்தத்தில் சில நொடிகள்....!

!!** தைரியம் **!!
ஆழமான பொய்கையிலே
அணு அளவும் பயமின்றி 
துள்ளி ஆடி 
பந்தாடினர்,
பத்து வயது பாலகர்
பலர்.
பொய்கையிலே
நீர் இல்லை
என்பதால்...
***********************************************************************
!!** சிதறல் **!!

உன் 
விழி வீச்சில் 
அடிபட்டு 
சிதறியது 
என் இதயம். 
சிதறிய துண்டுகளில் 
உன் 
அழகிய வதனம்...!
***********************************************************************
!!** (வெங்)காயம் **!!

காயபட்டவனுக் அல்லாமல்
காயப்படுதியவனுக்கு
கண்ணீர் வந்தது....
வெங்காயமும், சமையல் காரனும்.




***********************************************************************
!!** காத்திருப்பு **!!




கருவறையில் சூள் கொள்ளும் 
காத்திருப்புகள்....
கல்லறையிலும் பிரசவிக்காமல்
பிரசவ வழியை மட்டுமே 
காட்டி நிற்கும். 


***********************************************************************


    !!** என் Phone காதல் **!!

உன்னைக் காணும் பொழுதெல்லாம் on ஆகும் 
Cell Phone போல என் உள்ளத்திலும் 
ஒரு Light பற்றியது.
உன்னைக் காணும் ஒவ்வொரு தடவையும் 
என் Cell Phone Camera படம் எடுத்தது
சுகமாக,
உன் நினைவு நிமிடத்துக்கு 60 தடவை அடித்தது
Miss call.
உன் கண்களின் ஓரப்பார்வை அடிக்கடி என் ஆசைகளை 
Re-Load பண்ணியது.
உன்னுடன் பேச கிடைத்ததுமே உடனே Active ஆனது 
காதல்......
காதலை சொன்னதும் Bill காட்டாத line போல ஏன் என்னை 
Cut பண்ணினாய்?
இருந்தும் என் Dial செய்யும் பனி தொடர்ந்தது......
உன் Phone இல் இருந்து Plz.. try again later என்பது மட்டுமே 
பதிலானது.
இப்பொழுதெல்லாம் Sim Card இல்லாத Cell Phone போல 
ஜடமாகவே கிடக்கிறேன் நான்....,
நீயோ...,
வேறு ஒரு Phone இல் Insert ஆகி சுகமாக அனுப்புகிறாய் 
SMS!
பார்வையால் எத்தனையோ Call எடுத்தேன்
நான்.
எல்லா நேரமும் User Busy யாகவே உள்ளதேன்?




Tuesday, October 20, 2009

தியானம் செய்தால்..........!

பசுமையான மரங்கள் நிறைந்த மலைப்பகுதி....


விலங்குகள் அற்ற வனப்பிரதேசமான அங்கே அடிவாரத்தில் ஒரு குகை..


தியானத்திற்காக அங்கே மூன்று ஞானிகள் உட்கார்ந்திருந்தனர்.
மூவரும் குகையின் வாயிலை நோக்கி அமர்ந்திருந்தார்கள்.






குகையின் வெளிப்பகுதியில் குதிரையின் குழம்படி ஓசை கெட்டது...

சராலென... ஒரு குதிரையில் பயணித்த மனிதன் குகையைக் கடந்தான்...

மூன்று ஞானிகளும் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தனர்..

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

மூன்று ஞானியரில் ஒருவர் கூறினார்...”அந்த குதிரை வெள்ளை என நினைக்கிறேன்...”

அங்கே பூரண அமைதி...

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

இரண்டாவதாக இருந்த ஞானி கூறினார் .. “இல்லை இல்லை.. அந்த குதிரை கருப்பு நிறம் தான்.. ”

அங்கே பூரண அமைதி...

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

மூன்றாம் ஞானி கூறினார்... “ இப்படி இடைவிடாமல் பேசினீர்கள் என்றால் எப்படி தியானம் செய்வது ? நான் இருக்க வா போகவா?” என்றார்..



---------------------------------------------------------------------------


தியானம் என்பது கண்கள் மூடி அமர்ந்திருப்பதில்லை; மனம் மூடி அமர்ந்திருப்பது என பலருக்கு தெரிவதில்லை.

மெளனம் எனும் பெருவெளியில் உன்னதமான சக்தியின் மேல் பயணிப்பது தியானம் என கூறி ஒரு மொழியின் சிதறுண்ட எழுத்துக்களால் தியானத்தின் தன்மையை சிதைக்க முயல விரும்பவில்லை.

தினமும் பல மணி நேரம் தியானம் செய்கிறேன்.... தியானத்தில் இருக்கும் பொழுது எனக்கு ஒரு காட்சி புலப்பட்டது என பலர் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். நீங்களும் கேள்விப்படலாம்.

தியானம் செய்யும் ஒருவன் நேரத்தை நோக்கியும், ஒரு காட்சியாலும் கவனிக்கப்பட்டால் அங்கே அவனுக்கு விழிப்பு நிலை உண்டு என அர்த்தம். அது தியானம் ஆகுமா?

தியானத்தில் மன எண்ணங்களே இல்லை என கூறுபவர்கள் உண்டு. மன எண்ணமே இல்லை என்பதை பார்த்தவர் யார்? மன எண்ணம் இல்லை என்பதே ஒரு எண்ணம் தானே?

தியானம் என்றால் தியானம் + தியானிக்கபடுவது+தியானி இவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பது என்றார்கள் ஞானிகள்.

தியானம் எப்பொழுது செய்யவேண்டும்? அந்த வார்த்தையிலேயே இருக்கிறது விடை. “யா” எனும் எழுத்தை எடுத்து விடுங்கள்.